;
Athirady Tamil News

குடியுரிமை திருத்த சட்ட விமர்சகர்களுடன் மோடி பேசுவதில்லை- ப.சிதம்பரம் பதிலடி..!!!

0

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்துக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து உள்ளனர். இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள், குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றும், யாருடைய குடியுரிமையும் பறிக்கப்பட மாட்டாது என்றும் பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார்.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் பதிலடி கொடுத்து உள்ளார். அவர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை கொடுப்பதே அன்றி அதனை பறிப்பது அல்ல என்று பிரதமர் கூறுகிறார்.

என்.பி.ஆர். (தேசிய மக்கள் தொகை பதிவேடு) மற்றும் என்.ஆர்.சி. (தேசிய குடியுரிமை பதிவேடு) உடன் தொடர்புடையதாக கருதப்படும் சி.ஏ.ஏ. ஏராளமானவர்களை குடியுரிமை அற்றவர்களாக ஆக்கும் என்றும், குடியுரிமையை அவர்களிடம் இருந்து பறிக்கும் என்றும் என்னை போன்ற பலரும் நம்புகிறோம்.

பிரதமர் மோடி

கேள்விகள் கேட்க முடியாத அமைதியான மக்களிடம் உயர்தளங்களில் இருந்து மட்டுமே மோடி பேசுகிறார். நாங்கள் மீடியா வாயிலாக தெரிவிக்கிறோம். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்புகிறோம்.

தன்னை விமர்சிப்பவர்களுடன் மோடி பேசுவதில்லை. விமர்சிப்பவர்களுக்கு பிரதமருடன் பேச வாய்ப்பு கொடுப்பது இல்லை.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நேரடியாக விமர்சகர்கள் 5 பேரை தேர்வு செய்து பிரதமர் விவாதிப்பதே இதற்கு ஒரே வழியாகும். டெலிவி‌ஷன் விவாதத்தில் பிரதமர் பேசுவதை கேட்டு சி.ஏ.ஏ. பற்றி மக்களே முடிவு எடுக்கட்டும்.

எனது பரிந்துரைக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − four =

*