;
Athirady Tamil News

19 நாள்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு உள்ளது – பெற்றோலிக் கூட்டுத்தாபனம்!!

0

நாட்டில் தற்போது 47 ஆயிரத்து 947 தொன் 92 ஒக்ரைன் பெற்றோலும் 16 ஆயிரம் தொன் 95 ஒக்ரைன் பெற்றோலும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 957 தொன் டீசலும் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எனவே தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு 19 நாள்களுக்கு விநியோகிக்க போதுமானது என்று கூட்டுத் தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை குறித்து பொதுமக்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. தற்போதுள்ள எரிபொருள் இருப்பு 19 நாள்களுக்கு போதுமானது.

மேலும், ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் கொழும்பில் 16 ஆயிரம் தொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு கப்பல்கள் வரவிருக்கின்றன. அத்துடன், 15, 000 தொன் எரிபொருள் ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் வரவிருக்கிறது.
பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டதால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து எரிபொருளை மேலதிகமாக வாங்க பெற்றோலிக் கூட்டுத்தாபனம் திட்டமிட்டுள்ளது.

தற்போதைய எரிபொருள் இருப்புக்கள் பின்வருமாறு உள்ளன. பெற்றோல் (92 ஒக்ரைன்) – 47 ஆயிரத்து 947 தொன், பெற்றோல் (95 ஒக்ரைன்) – 16 ஆயிரம் தொன், லங்கா ஓட்டோ டீசல் – ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 957 தொன், சுப்பர் டீசல் – 4 ஆயிரத்து 463 தொன், விமான எரிபொருள் – 38 ஆயிரத்து 86 தொன் மற்றும் 70 ஆயிரத்து 130 தொன் ஒயில் என்பன கையிருப்பில் உள்ளன.

இந்த இருப்பு மதிப்பீட்டில் வரவிருக்கும் எரிபொருள் இருப்பு சேர்க்கப்படவில்லை – என்றுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நெருக்கடி நிலை காரணமாக பாரசீக வளைகுடாவில் போர் வெடித்தால் எரிபொருள் வழங்கல் தொடர்பான நிலமையை மதிப்பிடுவதற்காக இன்று (14) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 9 =

*