;
Athirady Tamil News

க.பொ.த உயர்தர 2022 புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 2019 ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயமலர்வில், 09.01.2020 (வியாழக்கிழமை) அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி.அபிராமி சிவரூபன் அவர்களும் விரிவுரையாளர் கஜவதனி கந்தசாமி அவர்களும் விலங்கியல்துறை சார்ந்த விளக்கவுரைகளை மாணவர்களிற்கு வழங்கியிருந்தனர்.

14.01.2020 (செவ்வாய்க்கிழமை) வளவாளராக யாழ் பல்கலைக்கழக கல்வியியற் துறை விரிவுரையாளர் திரு.சர்வேஸ்வரா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான எதிர்கால திட்டமிடல்கள் தொடர்பாக மாணவர்களை வழிப்படுத்தியிருந்தார்.
மேலும் யாழ் மாநகர ஆணையாளர் திரு.த.ஜெயசீலன் அவர்கள் மாணவர்களிற்கு இலங்கை நிர்வாக சேவை பற்றியும் அவற்றிற்கு மாணவர்கள் எவ்வாறு தேர்வாகலாம் என்பது பற்றியும் மாணவர்களினை வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + two =

*