;
Athirady Tamil News

மனிதனை போல் 3டி படத்தை கண்டுணரும் கணவாய் மீன்கள்- அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு..!!!

0

உலகில் எவ்வளவோ உயிரினங்கள் உள்ளன. ஆனால் சிந்திக்க தெரிந்த உயிரினங்களில் மனிதன் முதலில் உள்ளான் எனலாம். அதேபோல் மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன.

விலங்கினங்களில் சிம்பன்சி குரங்குகள், நாய், யானை இனங்களும், கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்களும், நீல திமிங்கலங்களும் அறிவுக்கூர்மை வாய்ந்தவையாகும். எந்த மொழியாகினும் மொத்தம் 165 வார்த்தைகளை நாய்களால் கற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில், கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன்களுக்கு மனிதர்களை போன்று முப்பரிமாண படங்களை பார்த்தறியும் பண்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கணவாய் மீன்கள் ஆக்டோபஸ் வகையைச் சேர்ந்த மெல்லுடலிகளாகும். இது மிகவும் பரந்தும் தட்டையாகவும் இருக்கும். இம்மீன் 15-25 செ.மீ நீளமும் 50செ.மீ அகலமும்,10.5 கிலோ எடையுடன் காணப்படும். இதன் உள்தோட்டை கணவாய் எலும்பு என்பர். இந்த உள்தோடு உலோகங்களை மெருகேற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கணவாய் மீன்கள் சுவை மிகுந்த உணவாகவும் பயன்படுகின்றன.

கணவாய் மீன்

3டி எனும் முப்பரிமாண படங்களை குறித்து நாம் அறிவோம். திரையில் தெரியும் அனைத்தும் நம் கண்முன் ஏன் கண்ணுக்குள் உள்ளதாகவே சமயத்தில் தோன்றும். மெல்லுடலிகளுக்கு நம்மைப்போன்ற மெய்நிகர் அனுபவம் கிடைக்கப்பெற்றால் அவை என்ன செய்யும் என காணவிரும்பிய அமெரிக்க கடல்வாழ் உயிரின ஆய்வுக்குழு வித்தியாசமான சோதனையில் ஈடுபட்டது.

அதற்காக கணவாய் மீன்களுக்கு முப்பரிமாண கண்ணாடிகளை அணிவித்து ஒரு காணொளியை பார்க்க வைத்தனர். அந்த காணொளி அவற்றிற்கு பிடித்தமான இறால் மீன்கள் நீந்துவது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.

திரையில் தெரிந்த இறால்களை உண்மை என நினைத்து கணவாய் மீன்கள் அவற்றை தாக்க தொடங்கின. இறால்களின் இயக்கத்திற்கேற்ப தங்களது தாக்குதல் முறையை மாற்றிக்கொண்டன. அதாவது அவற்றின் வெவ்வேறு கைகளால் தாக்கத் தொடங்கின.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், ‘கணவாய் மீன்களுக்கு கேமரா வகை கண்கள் உள்ளன, அவை கார்னியா, லென்ஸ், கருவிழி மற்றும் விழித்திரை ஆகியவற்றைக் கொண்டுள்ளன. அவைகள் ஸ்டீரியோப்சிஸைப் (இருவிழி இயைகோணக் காட்சி) பயன்படுத்துவதற்கான திறனைக் கொண்டுள்ளன, அதாவது அவைகளால் தூரத்தை அறிய முடியும், ஏனெனில் அவைகளின் மூளை இரு கண்களிலிருந்தும் வரும் சமிக்ஞைகளுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குகிறது.

ஐரோப்பிய கடல்பகுதிகளில் காணப்படும் கணவாய் மீன்களில் சிலவற்றையும் இந்த சோதனைக்கு உட்படுத்தினோம். அவைகளுக்கும் இப்பண்பு உள்ளது. மனிதர்களைப் போன்று கணவாய் மீன்களாலும் காணும் பொருளின் மூன்றாவது பரிமாண ஆழத்தை உணர முடிகிறது’ என தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*