;
Athirady Tamil News

மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது.!! (படங்கள்)

0

சட்டவிரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 09 பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது.

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல் ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறான கெசல்கமுவ ஓயாவிற்கு சமீபமாக போட்ரி பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஓன்பது பேர்,இன்று (15) இரவு 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக மிகவும் சூக்சுமான முறையில் சட்ட விரோத மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் கிடைத்த, இரகசிய தகவலினையடுத்து, சுற்றி வளைப்பினை மேற்கொண்ட பொலிஸார் குறித்த குழுவினரை கைது செய்துள்ளனர்.
இந்த குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இரு இடங்களில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்டதாகவும், இரண்டு குழுக்களையும் பொலிஸார் பாரிய முயற்சியின் பின் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன் போது மாணிக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட நீர் இரைக்கு இயந்திரம்,கூடைகள்,பரல்கள்,அலவாங்கு,மண்வெட்டி,பைகள் உட்பட பல பொருட்கள் இதன் போது மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் பொகவந்தலா, எலிபொட, நோர்வூட் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்,இவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்படவுள்ளதாகவும, எதிர்வரும் 20 ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − sixteen =

*