;
Athirady Tamil News

கல்யாணமாகி ஒரு முத்தம் கூட இல்லை.. பக்கத்திலும் வரமுடியலை.. கடைசியில் பார்த்தால்.. ஷாக் ஆன முதும்பா! (வீடியோ)

0

சில நேரங்களில் எப்படியெல்லாம் ஏமாற்றுக்காரர்கள் மோசடி செய்வார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கஷ்டமாக இருக்கும். எதிர்பார்த்திருக்கவே மாட்டோம்.. அப்படி ஒரு சம்பவம் உகாண்டா நாட்டில் நடந்திருக்கிறது.. அந்த சம்பவம் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஷாக்கில் இருக்கிறாராம் இந்த ஸ்டோரியின் நாயகன்! உகாண்டா நாட்டைச் சேர்ந்தவர் ஷேக் முகம்மது முதும்பா.. இவருக்கு 27 வயதாகிறது. இவர் ஒரு இமாம் ஆவார். இவருக்கு வீட்டில் பெண் பார்த்து கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர். பெண்ணையும் பார்த்தாச்சு.. பெண்ணோட பெயர் ஸ்வாபுல்லா நபுகீரா. நல்ல நளினமான பெண் என்பதால் முதும்பாவுக்கும் பிடித்துப் போய் விட்டது. அந்தப் பெண்ணும் முதும்பாவை ரொம்பப் பிடித்துப் போய் விட்டதாக சொல்ல, பிறகென்ன கல்யாணம்தான்.

டிசம்பர் மாதம் கல்யாணம் நடந்தது. அதன் பிறகுதான் காமெடி காட்சிகள் அரங்கேறின. கல்யாணமானது முதல் அந்தப் பெண் கணவருக்கு மனைவியாக நடந்து கொள்ளவில்லை. மாத விடாய் வந்து விட்டது என்று சொல்வார். கணவரை கட்டிப் பிடிக்க விட மாட்டார். முத்தம் கொடுக்கலாமான்னு கேட்டா கூட.. ம்ஹூம் என்று சொல்லி ஏதாவது காரணம் கூறுவார். இரவில் இன்னும் மோசம். பக்கத்தில் படுக்க விட மாட்டாராம். அதற்கும் ஒரு காரணம் சொல்வாராம். பிறகு இரவில் ஒரு நாள் கூட உடையை கழற்ற விட்டதே இல்லையாம். முழு உடையுடன்தான் படுத்திருப்பாராம். இது ஏன் என்று கேட்டால், அதற்கும் ஒரு காரணம். கடுப்பாகி சலித்துப் போய் விட்டார் நம்ம இமாம். பிறகு, புது மாப்பிள்ளைக்கு கடுப்பு வராதா என்ன.

இப்படி கணவருடன் சற்று தூர இருந்தாலும் வீட்டில் உள்ளவர்களிடம் நன்றாகவேப் பழகி வந்துள்ளார் நபுகீரா. அவரது குரல் அத்தனை பேருக்கும் ரொம்பப் பிடிக்குமாம். காரணம் அவ்வளவு இனிமையாக இருக்குமாம்.. எல்லாம் இருந்தும் என்னய்யா புண்ணியம்.. எனக்கு அது கிடைக்கலையே என்று கடுப்பாகிக் கிடந்தார் நம்ம இமாம். இந்த நேரத்தில்தான் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்தது. அதாவது பக்கத்து வீட்டில் திருடு நடந்துள்ளது. அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். நம்ம நபுகீராதான் திருடி விட்டதாக புகாரில் கூறவே போலீஸார் விசாரணைக்கு வந்தனர். விசாரிக்க வந்த போலீஸாருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.. ஆமாங்க ஆமா.. நம்ம நபுகீராவிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் ஒரு ஆண் என்பதை அறிந்து அப்படியே மயக்கமடையாத குறையாக அதிர்ந்து போயினர்.

இவர்களை விட மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தவர் மாப்பிள்ளை முதும்பாதான். தான் இத்தனை நாட்களாக குடும்பம் நடத்தி வந்தது பெண் அல்ல ஆண் என்று தெரிந்ததும் அவர் மனசே குழம்பிப் போய் விட்டது. மண்டை காய்ந்து விட்டது. விசாரணைக்குப் பின்னர் போலீஸார் நபுகீராவைக் கைது செய்து கூட்டிப் போய் விட்டார்கள். முதும்பா மனம் பேதலித்தது போல மாறி விட்டார். அவருக்கு மன நல கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனராம். ஏன் இப்படி செஞ்சே என்று நபுகீராவிடம் போலீஸார் கேட்டபோது, இமாமிடம் நிறைய பணம் இருக்கிறது. அதை அப்படியே சுருட்டிக்கத்தான் இப்படி பெண் வேடம் போட்டு மணம் புரிந்தேன்.

அவர் நெருங்கி வரும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி டச் பண்ணாமல் தடுத்து வந்தேன். கடைசியில் இப்படியாகி விட்டது என்றாராம். முதும்பாவுக்கு இப்போது இன்னொரு அதிர்ச்சி.. அதாவது ஆணைக் கல்யாணம் செய்து கொண்டதால் அவரை இமாம் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து விட்டார்களாம். இப்போது முதும்பா கதைதான் உகாண்டாவில் பரபரப்பாக பேசப்படுகிறதாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + six =

*