;
Athirady Tamil News

உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை இறந்தது..!!!

0

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கஹேரி மாவட்டம் நிகாசன் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர் கடந்த ஆண்டு செம்பூர்ன நகரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்தார்.

அப்போது அங்கு அவரை உறவுக்கார வாலிபர் ஒருவர் மிரட்டி ஒரு மாதமாக கற்பழித்தார். தனது ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பமானார்.

இதையடுத்து போலீசில் பெற்றோர் புகார் செய்ததன் பேரில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்தது.

ஆனால், பிறந்த 2 மணி நேரத்திலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. குற்றவாளிக்கு எதிராக சாட்சியத்தை பெற, பாதிக்கப்பட்ட இளம்பெண் இறந்த தனது குழந்தையை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹுந்தி மாவட்டம் ஹததுமி கிராமத்தைச் சேர்ந்த 6 சிறுமிகள் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மகர சங்கராந்தி விழாவில் கலந்து கொண்டுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது 5 வாலிபர்கள் சிறுமிகளை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர். இதில் 2 சிறுமிகள் தப்பி ஓடிவந்துவிட்டனர். மற்ற 4 சிறுமிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளான ராஜேஷ்சங்கா, பிரவின்நக், அவினேஷ் சன் முருகா, சாகர் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 4 வாலிபர்களும் 18 வயது முதல் 20 வயது உடையவர்கள் ஆவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*