;
Athirady Tamil News

சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ்!!

0

சீனாவில் பரவிவரும் அடையாளம் காணப்படாத வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அவதான நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உனான் மாகாணத்தில் பரவரும் அடையாளம் காணப்படாத ஒருவகை வைரஸ் பரவல் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவ்வாறான வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் கடந்த காலங்களில் சீனா மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பரவிய ´சார்ஸ்´ என்ற வைரசை ஒத்தது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தாக்கத்தால் சீனாவில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் வைத்தியாசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி வைரஸ் உனான் மாகாணத்தில் இருந்து சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற இருவருக்கு தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அமெரிக்கா, தாய்லாந்து, இந்தியா, ஜப்பான், தைவான் உள்ளிட்ட பல நாடுகள் சீனாவுக்குச் செல்லும் தனது நாட்டு பிரஜைகளை இந்த வைரஸ் தாக்கம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eleven =

*