;
Athirady Tamil News

யாழ். வல்வெட்டித்துறை நகரைத் திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்கள்!! (படங்கள்)

0

யாழ்.வல்வெட்டித்துறை இளைஞர்களால் வரையப்பட்ட சுவரோவியங்கள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளன.

வல்வை மண்ணின் சிறப்புக்கள், தமிழர் பாரம்பரியம், வரலாறு மற்றும் சமூக விழிப்புணர்வை உள்ளடக்கி குறித்த ஓவியங்கள் வல்வெட்டித்துறை இளைஞர்களால் வரையப்பட்டுள்ளன.
வல்வை நகரையே அழகாக மாற்றியுள்ள இந்த சுவரோவியங்களைத் தினமும் ஏராளமானோர் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை, வல்வை இளைஞர்கள் சுவரோவியங்கள் வரைவதுடன் மாத்திரம் நின்றுவிடாது மரநடுகை மேற்கொள்ளல், சிரமதானம் போன்ற உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை இன்றைய இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*