;
Athirady Tamil News

ஜனாதிபதி ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது உறுதி!!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கடந்த அமைச்சரவையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் சம்பளம் தருவதற்கு முடிவு செய்துள்ளாரகள்.

இது அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பல கூட்டங்களிலும் கூறியிருக்கிற விடயம். அந்த வகையிலே இரண்டு மாதம் முடிவதற்குள் பல நல்ல திட்டங்களை செய்த ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களையும் மறவாமல் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக உறுதி மொழிகூறியிருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு நல்ல நம்பிக்கையை கொடுக்கின்றது.

எப்போதும் சொல்வதை செய்பவர் செய்வதையே சொல்பவர் என்ற வகையில் அவர் இந்த சம்பளத்தினை தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என முன்னயாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ் சதாசிவம் தெரிவித்தார்.

இன்று (19) காலை நுவரெலியாவில் நடைபெற்ற தோட்டக் கமிட்டி தலைவர்கள் கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த இரண்டு மாதங்களில் மக்கள் சார்ந்த பல நலன் திட்டங்களை எடுத்துள்ளதோடு அவர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருபவர் என்ற வகையிலும், அவர் நகர அபிவிருத்தி செயலாளராக இருந்த போது அவர் முன்னெடுத்து நடவடிக்கைகள் ஆகியனவற்றை உற்று நோக்கும் போது அவர் இதனை எவ்வாறாவது செய்து விடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் மக்களை குழப்புவதற்காக பல வாக்குறுதிகளை வழங்கினார்கள்.

1500 ரூபாய் என்றார்கள், ஆனால் இறுதியில் 50 ரூபாய் கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.

இந்நிலையில் இன்று அவர்கள் ஊடகங்களில் முகப்புத்தகங்களிலும் இது நடக்காது என அவநம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

இது அவர்களின் இயலாமையினையே எடுத்து காட்டுகின்றது.

தோட்டத் தொழிலாளர்கள் இன்று பல்வேறு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கயுள்ள நிலையில் இந்த ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்தால் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

எனவே இதனை ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அளித்த வாக்குறுதி என்பதால் இதனை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − eleven =

*