;
Athirady Tamil News

சர்வதேச குத்துச்சண்டை வீரர்களுக்கு விசேட ஆராதனை நிகழ்வு!! (படங்கள்)

0

சர்வதேச குத்துச்சண்டை போட்டிக்கு பாக்கிஸ்தான் செல்லும் வீரர்களுக்கு வவுனியாவில் விசேட ஆராதனை நிகழ்வு நடத்தப்பட்டது.

வடமாகாணம் ஏழாம் அறிவு தற்காப்பு கலை சங்கத்தின் வீரர்களான, எஸ்.சஞ்சயன், ரி.நாகராஜா, பி.ராகுல், வி.வசீகரன், எஸ்.சிறிதர்சன் மற்றும் ஆர்.கெ. கேவின் ஆகியோர் எதிர்வரும் 22-01-2020 கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டிக்கு பாக்கிஸ்தான் செல்லவுள்ளதால் , அவர்களுக்கு வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள நாற்சதுர சுவிசேச சபையில் இறை ஆசி வேண்டி விசேட ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

குறித்த குத்துச்சண்டை வீரர்களுக்கான விசேட ஆராதனை நிகழ்வானது வவுனியா நாற்சதுர சுவிசேச சபையின் தலைமை போதகர் பி.என்.சேகர் தலைமையில் நடைபெற்றது.

‘பிரன்ஞ் சவாட் கிக் பொக்சிங்’ அமைப்பின் அனுசரணையுடனும், கல்வி அமைச்சின் அனுமதியுடனும் எதிர்வரும் 22-01-2020 பக்கிஸ்தான் லாகூரில் கடாபி விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெறவுள்ள கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் இவ்வீரர்கள் வடக்கு மாகாணத்தை பிரதிபலித்து இலங்கைக்காக விளையாடவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × one =

*