;
Athirady Tamil News

நண்பரிடம் நிதிமோசடி செய்த நபர் விளக்கமறியலில்!!

0

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(19) உத்தரவிட்டார்.

திருகோணமலை, மாணிக்கவாசகர் வீதி, பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நண்பர் ஒருவரிடம் ஒப்பந்த வேலைகள் மேற்கொள்வதற்காக வேண்டி நான்கு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக பின்பு தருவதாக கூறி பணத்தினை பெற்றுள்ளார்.

இரண்டு வருடமாகியும் பணத்தினை செலுத்தாததால் குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × two =

*