;
Athirady Tamil News

கர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள்! பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்..!!!

0

நேபாளத்தில் இளம்பெண்ணின் கருவில் மூன்று குழந்தைகள் இருப்பதாக X-rayவில் தெரிந்த நிலையில் அவர் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுனிதா பிரதன் (26) என்ற இளம்பெண் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வீடியோ X-rayவில் கருவில் மூன்று குழந்தைகள் இருப்பது தெரிந்தது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சுனிதாவுக்கு சிசேரின் மூலம் மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர்.

அப்போது அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தது மருத்துவர்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஒருசேர ஆழ்த்தியது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், 800,000 கர்ப்பிணி பெண்களில் ஒருவருக்கு தான் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறக்கும்

X-rayவில் மூன்று குழந்தைகள் தெரிந்து பின்னர் ஆப்ரேஷன் செய்யும் போது நான்கு குழந்தைகள் இருந்தது எங்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.சுனிதாவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

நான்கு குழந்தைகளின் எடையும் குறைவாக உள்ள போதும் ஆரோக்கியமாகவே உள்ளன என கூறியுள்ளனர்.

சுனிதாவின் கனவர் கவுரவ் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் மனைவியின் பிரசவத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் அவரை கவனித்து கொள்ள ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 17 =

*