;
Athirady Tamil News

புறப்பட தயாரான விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீ பிடித்ததால் பீதியடைந்த பயணிகள்..!!

0

ரஷ்யாவில் புறப்பட தயாரான விமானத்தின் இயந்திரத்தில் திடீரென தீ பிடித்ததால் பயணிகள் பீதியடைந்துள்ளனர்.

நோவோசிபிர்ஸ்க் நகரில் உள்ள டோல்மாசெவோ விமான நிலையத்தில் இருந்து ஏர்பஸ் ஏ 321 என்கிற விமானம், 27 குழந்தைகள் உட்பட 208 பயணிகளுடன் வியட்நாம் நோக்கி புறப்பட தயாராக இருந்தது.

ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த போது, திடீரென விமானத்தின் இயந்திரத்தில் தீ பிழம்புகள் ஏற்பட ஆரம்பித்ததால் பயணிகள் பெரும் பதற்றமடைந்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், விமானத்தின் தீயணைப்பு எதிர்ப்பு அமைப்பை செயல்படுத்தினர்.

இதனையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என விமான நிர்வாக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + one =

*