;
Athirady Tamil News

தாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக சென்ற பிரித்தானிய சகோதரிகள்: குளியலறையில் இருந்து சடலமாக மீட்பு..!!!

0

தாத்தாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் சென்ற பிரித்தானிய சகோதரிகள் இருவர், ஹோட்டல் குளியலறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை சேர்ந்த மரியா ரெஹ்மான் (25) மற்றும் அவரது சகோதரி நதியா (17) ஆகியோர், தங்களுடைய தாத்தாவின் இறுதிச் சடங்கின் ஆண்டு விழாவிற்காக, தந்தை அப்துல் மற்றும் தாய் ஜரினாவுடன் வடக்கு பாகிஸ்தானின் குஜராத் நகரத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஜனவரி 12ம் திகதி அன்று இருவரும் ஹோட்டல் அறையில், ‘அரை இறந்த நிலையில்’ காணப்பட்டுள்ளனர். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கண்டு செல்லப்பட்ட இருவரும் அங்கு இறந்துவிட்டதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இருவரும் தங்கள் அறையில், எரிவாயு கசிந்த நீரை பயன்படுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த எரிவாயுவானது தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படும்.

விசாரணை தொடங்கப்பட்டு அதிகாரிகளுக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையும் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘மரணங்களை ஒரு விபத்து என்று ஏற்றுக்கொண்டதால்’ பெற்றோர்கள் சட்ட நடவடிக்கைகளை பரிசீலிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − two =

*