உணவக ஊழியரிடம் உதவி கோரிய பிரித்தானிய இளம்பெண்: அடிமையாக வைத்திருந்த கனேடியர் கைது..!!!

பர்கர் விற்பனையக ஊழியர் ஒருவரிடம் ஒரு பிரித்தானிய பெண் கொடுத்த துண்டுச்சீட்டு அவரை பாலியல் அடிமையாக வைத்திருந்த கனேடியரை சிக்கவைத்துள்ளது.
கனேடிய மற்றும் போர்ச்சுக்கீசிய இரட்டைக் குடியுரிமை கொண்டவரான Donald Fernandes (35) என்பவர், மதுபான விடுதியில் தான் சந்தித்த இரண்டு பெண்களை போர்ச்சுகல்லில் இருக்கும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக அவர்களை அடைத்து வைத்த Fernandes, அவர்களை மிரட்டி வன்புணர்வு செய்துள்ளார்.
அவர்களில் ஒரு பெண் பிரித்தானியர், மற்றவர் பிரேசிலைச் சேர்ந்தவர். பெயர் வெளியிடப்படாத அந்த பிரித்தானியப் பெண்ணை ஒரு நாள் ஷாப்பிங் அழைத்துச் சென்றுள்ளார் Fernandes
அப்போது அங்கிருந்த பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவரிடம், ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்துள்ளார் அந்த பிரித்தானிய பெண்.
அதில், ’உதவி செய்யுங்கள், என்னை கடத்தி வைத்திருக்கிறார்கள்’ என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்ட அந்த ஊழியர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பொலிசார் Fernandesஐக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட Fernandes, கனடாவில் தனது வீட்டின் அருகே நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவரும், சிறையிலிருந்து தப்பியவரும் ஆவார்
விசாரணையில் இரண்டு பெண்களும் தங்கள் விருப்பத்தின்பேரிலேயே தம்முடன் தங்கியதாகவும், பாலுறவு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் Fernandes.
பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் இருவரும் சொந்த நாடு திரும்பியுள்ள நிலையில், Fernandes மீதான வழக்கு விசாரணை தொடங்க உள்ளது