;
Athirady Tamil News

கண்டியன் விவாக சட்டத்தை நீக்க வேண்டும்!!

0

கண்டியன் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை நீக்குவதற்கான பிரேரணை இன்று (21) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் ஒன்றுகூட உள்ள நிலையில் இதன்போது குறித்த பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர் அத்தரலியே ரத்ன தேரரினால் சமர்பிக்கப்பட உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவிற்கு கருத்து தெரிவித்த அவர், தனிப்பட்ட பிரேரணையாக கண்டியன் விவாக சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் விஷேடமாக முஸ்லிம்களுக்கு மட்டுமான நீதிமன்ற முறையை நிராகரித்தது போன்று கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் முஸ்லிம் விவாக சட்டம் மட்டுமல்லாது கண்டியன் விவாக சட்டத்தையும் நீக்குவதற்கான பிரேரணையை சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*