;
Athirady Tamil News

மன்னார் மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் தெரிவு!! (படங்கள்)

0

மன்னார் சர்வோதயத்தில் இன்று 21.01.2019 கிராமசுவராஜ்யம் தொடர்பான விளக்கம் தேசோதய சமூகசெயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை சர்வோதய மாவட்ட இணைப்பாளர் திரு.பி.யு. துஷ்யந்தன் மற்றும் சமாதானத்திற்கான விழுமியங்கள் இளைஞர் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ரீ.தகசிம் அவர்களினால் வழங்கப்பட்டது. இதில் சர்வோதயம் தொடர்பான கல்வி தேசோதயம் பற்றிய அறிவும் வழங்கப்பட்டது.

2020 புதிய தசாப்தத்திற்கான மாவட்ட தேசோதய தலைவராக திருமதி. சுகந்தி செபஸ்ரியான் அவர்களும், செயலாளராக திரு. போஜீயா குளாஸ் அவர்களும், பொருளாளர் திரு. லெவின் பெனடிற் அவர்களும், உப தலைவர் திரு. அன்ரன் குருஸ்அவர்களும், உப செயலாளராக திருமதி. செல்வப்பூரணி அவர்களும் மற்றும் இளைஞர் ஆலோசனை பொறுப்பாளராக திரு. விநோத் மற்றும் மூத்தோர் ஆலோசனை பொறுப்பாளராக திரு. பி.ஏ. அருளானந்தம் ஆகியோர் கொண்ட மாவட்ட தேசோதயம் ஆரம்பிக்கப்பட்டது.
சர்வோதய ஊடகப்பிரிவு


தேசத்தின் சிறந்த நலன்களுக்காக பணியாற்றுவதில் நாம் உறுதி – பி.யு.துஷ்யந்தன்!!

மன்னார் மாவட்ட சர்வோதய நிலையத்தில் 2020 ஆண்டுக்கான நிகழ்வு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − eleven =

*