;
Athirady Tamil News

உலகின் 2-வது மிகப் பெரிய வைரத்தை வாங்கும் நிறுவனம்! அதன் மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?..!!!

0

உலகின் புகழ் பெற்ற மிகப் பெரிய 2-வது வைரத்தை லூயிஸ் உய்ட்டன் என்ற நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Botswana-வில் உள்ள Karowe சுரங்கில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1,758 கேரட் கொண்ட செவெலோ வைரம் வெட்டி எடுக்கப்பட்டது.

டென்னிஸ் பந்து வடிவ இந்த வைரத்தின் விலை சுமார் 355 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது, இந்த விலையுயர்ந்த வைரத்தை , ஆடம்பர கைப்பைகளுக்கு பெயர்போன பிரெஞ்சு பேஷன் பிராண்ட் நிறுவனமான லூயிஸ் உய்ட்டன் வாங்கவுள்ளதாக அதன் தலைமை நிர்வாகி மைக்கேல் பர்க் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தங்களின் போட்டி நிறுவனத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*