;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்காலிக நியமனமே!!

0

பாராளுமன்ற உறுப்பினர் பதவி மக்களால் ஒருவருக்கு வழங்கப்பட்ட தற்காலிக நியமனத்தை போன்றது என பதுளை மாவட்ட பராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் பதுளை ​வெளஸ்ஸ காரியாலய பிரிவில் அமைக்கப்பட்ட வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (21) மாலை இடம்பெற்றது.

இதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அவ்வாறான நியமனத்தை மக்கள் வழங்கும் போது அதன் பதவிகாலம் வெறுமனே ஐந்து வருடங்கள் என்பதை உணர்ந்துக்கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகாலத்தை மீள புதுபிக்கும் காலம் வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − four =

*