;
Athirady Tamil News

சீனாவில் பரவும் வைரஸ் காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம்!!

0

சீனாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் தொடர்ந்தும் பரவு வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வைரஸ் பரவும் விதம் தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணைக்குழுவின் பிரதி அமைச்சர் லீ பின் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் சீனாவில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 440 பேர் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்நாட்டின் வுஹேன் பகுதியில் கண்டறியப்பட்ட குறித்த வைரஸ் தற்போது பல்வேறு பகுதிகளுக்கு பரவியுள்ளதுடன் ஜப்பான், தாய்லாந்து, தென் கொரிய மற்றும் அமெரிக்காவிலும் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிராபத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் காரணமாக உலகம் பூராகவும் அவசர சுகாதார நிலமையை பிரகடணப்படுத்துவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு நேற்று விஷேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை சீனாவில் பரவு வரும் குறித்த வைரஸ் நோய் நிலமை காரணமாக விஷேட சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நோய் பரவியுள்ள பகுதிகளில் இருந்து வருகை தரும் பயணிகளை பரிசோதனைக்கு உட்படுத்த விமான நிலையத்தில் விஷேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − eight =

*