;
Athirady Tamil News

நேற்று இருதலைக்காதல், இன்று ஒருதலைக்காதல்?: இலங்கையை உலுக்கியுள்ள காவுவாங்கும் காதல்!!! (படங்கள்)

0

காதல் திருமணத்திற்கு வீட்டில் அனுமதிக்காததினால் தமிழ் இளைஞனும், யுவதியும் பொது இடத்தில் தூக்கிட்டுத் தற்கொ லை செய்துகொண்ட சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றிருந்தது.

குறித்த சம்பவம் நேற்று (21) செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 5 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

மாத்தளை – கந்தேநுவர பிரதேசத்தில் தாதியாக பணிபுரியும் யுவதியும், தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளைஞனுமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று (22) யாழில் பெரும் பயங்கர சம்பவமொன்று இடம்பெற்று மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்று மதியம் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வெட்டிக் கொலை செய்த நபர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளை அங்கிருந்தவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் ஒருதலைக்காதலால் இந்த கொலை இடம்பெற்றதாகவும், இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்விகற்றுவரும் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மாணவியெனவும், இந்த பெண்ணை கொலை செய்தவர் ஒரு இராணுவ வீரர் எனவும் தெரியவந்துள்ளது.

இப்படி நேற்று இன்று என அடுத்தடுத்து காதலின் பெயரால் இடம்பெறும் கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் இலங்கை மக்களை உலுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − fourteen =

*