;
Athirady Tamil News

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு!! (படங்கள், வீடியோ)

0

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் விசேட கல்வி அலகுத் திறப்பு விழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(21) முற்பகல்-10.30 மணி முதல் இடம்பெற்றது.

மேற்படி வித்தியாலய அதிபர் த. லோகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம் வலய விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யோ. துஷ்யந்தன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் வலய விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் அ. தினேஷ்குமார் மற்றும் யாழ்ப்பாணம் ஐசாக் நிறுவன இணை இணைப்பாளர் ந. சுகிர்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட வலிகாமம் வலய விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் யோ. துஷ்யந்தன் விசேட கல்வி அலகுப் பிரிவை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் வித்தியாலய அதிபர் மற்றும் விருந்தினர்களுடன் விசேட கல்வி ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, மேற்படி பாடசாலையில் கடந்த-2009 ஆம் ஆண்டு முதல் விசேட கல்வி அலகு இயங்கி வந்த போதும் கடந்த-2015 ஆம் ஆண்டில் விசேட கல்வி அலகு ஆசிரியர்களின் இடமாற்றத்திற்குப் பின்னர் விசேட கல்வி அலகு மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் இணைந்து சிரமத்தின் மத்தியில் உட்படுத்தல் கல்வியைக் கற்று வந்தார்கள்.

இந்த நிலையில் ஐசாக் நிறுவனம் முன்வந்து இந்தப் பாடசாலையில் ஏற்கனவே காணப்பட்ட வகுப்பறையைத் தனியான விசேட கல்வி அலகாக மாற்றுவதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள். குறித்த வகுப்பறையை விசேட கல்வி அலகாக மாற்றுவதற்கான வர்ணம் தீட்டுதல் செயற்பாடுகளை புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலய ஆசிரியர்கள் எவ்வித ஊதியமின்றித் தாமாக முன்வந்து முன்னெடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*