;
Athirady Tamil News

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய தடயவியல் அறிக்கை சமர்ப்பிப்பு!!

0

சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறித்த அறிக்கையின் பிரதிகள் வழங்கப்படும் என சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்தற்கு அமையவே இன்று இந்த பிரதிகள் வழங்கப்பட்டன.

எவ்வாறாயினும் தமக்கு முழுமைபடுத்தப்படாத அறிக்கையே வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஏற்கனவே கோப் குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் திகதியுடன் பாராளுமன்ற அமர்வு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால் அதனை சபையில் சமர்பிக்க முடியாமல் போனது.

இந்த நிலையில் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் திகதி ஆரம்பித்த நிலையில் குறித்த அறிக்கையை சபையில் முன்வைக்குமாறு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் கோரினர்.

அதற்கமைய அந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரதிகள் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என சபாநாயகர் நேற்று யோசனை ஒன்றை முன்வைத்தார்.

இந்த யோசனைக்கு அமையவே குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரதிகள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இறுவட்டு வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முழுமைப்படுத்தப்படாத அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*