;
Athirady Tamil News

வவுனியாவில் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

0

வவுனியாவில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதுதீனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட்டது.

ரிசாட் பதியுதீன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கத்தை தகாத வார்த்தை பிரயோகத்தின் மூலம் விமர்சித்துள்ளமையை கண்டித்து, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், எமது சபை தலைவரை அவதூறாக பேசிய பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட்டுக்கு கண்டனம், குப்பைமேட்டுக்கு அருகில் குடியேற்றம் செய்தது யார்? மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு தெரியாதா? குடியேற்றத்தை குப்பை மேட்டுக்கு அருகாமையில் செய்ய கூடாது என்று, குப்பைகளை எங்கே போடுவது போன்ற வாசகங்களை தாங்கி நின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + twenty =

*