;
Athirady Tamil News

யாழ். சுகாதார ஊழியர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டம்!! (படங்கள்)

0

நிரந்த நியமனம் வழங்கப்படும்வரை தொடர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் யாழ்ப்பாணம் சுகாதார ஊழியர்கள்.

கடந்த இரண்டு நாள்களாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு மாநகர சபையின் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் தமது தொடர்ச்சியான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் களம் இறங்கியுள்ளனர்.

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நேற்றுமுன்தினம் ஆரம்பித்த பணி புறக்கணிப்பில் இன்றைய தினம்வரை தமக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்று உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − one =

*