;
Athirady Tamil News

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறை; வீதியினை மறித்து போராட்டம்!! (படங்கள்)

0

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய கோரி வீதியினை மறித்து போராட்டம்

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக ஏ9 வீதியினை வழிமறித்து இன்று (24.01.2020) காலை கவனயீர்ப்பு போராட்டமோன்று முன்னேடுக்கப்பட்டது.

மடுக்கந்தை தேசிய பாடசாலையில் 80 ஆசிரியர்கள் கடமையாற்ற வேண்டும் ஆனால் தற்போது 35 ஆசிரியர்கள் மாத்திரமே கடமையாற்றுக்கின்றனர். எமது பாடசாலையில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தருமாறு கோரி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களினால் இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னேடுக்கப்பட்டது.

வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் போராட்ட இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி ஒரு வார காலத்தினுள் தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தார். தீர்வினை எழுத்து மூலம் தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்த நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முன்பாக எழுத்து மூல கடிதத்தினை வாசித்து காட்டியதுடன் அவர்களிடம் கடித்தினை கையளித்தார்.

மடுக்கந்தை பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய் முடியாத நிலை காணப்பட்டது. மத்திய கல்வி அமைச்சருடன் தொடர்பு கொண்டதுடன் ஒரு வார காலத்தினுள் இதற்குரிய தீர்வினை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர். விரைவில் குறித்த பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வோம் என வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக ஏ9 வீதியுடான போக்குவரத்து ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன் மாற்றுப்பாதையுடாக போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 16 =

*