;
Athirady Tamil News

அதிக வேகத்தால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

0

நிட்டம்புவ, அத்தனகல்ல வீதியின் சிறிமாவோ பண்டாரநாயக்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + two =

*