;
Athirady Tamil News

பொது நிதிக் குழுவின் தலைவராக சுமந்திரன் எம்.பி. தெரிவு!!

0

பொது நிதிக் குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு தீர்மானம் எடுத்தது.

கோப் உள்ளிட்ட தெரிவுக் குழுக்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (25) இடம்பெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துலையாடலில் தெரிவுக் குழு உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

அரச பொது நிதி தெரிவுக்குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிக்கத் தீர்மானித்தது. குழுக்களின் உறுப்பினர்களை வரும் 5ஆம் திகதி நாடாளுமன்றில் சபாநாயகர் அறிவிப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*