;
Athirady Tamil News

இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – பிரதிவாதிகள் 13 பேருக்கு பிணை!!

0

2008, 2009 ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் டீ.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 13 பிரதிவாதிகளுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு பிரதிவாதியும் ஐந்து இலட்சம் பெறுமதியான ரொக்க பிணையிலும், இருபத்தையாயிரம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கின் 13 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொட நீதிமன்றில் ஆஜராகவில்லை.

வழக்கின் முறைப்பாட்டாளர் தொடர்பில் மன்றில் ஆஜரான அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் நாயகம் சரத் ஜயமான்ன, வெலிகடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியால் பிரதிவாதிகளுக்கு எதிராக நோட்டிஸ் அனுப்பப்பட்டமை குறித்த எந்தவித அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என கூறினார்.

அதற்கமைய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடவுக்கு எதிராக நோட்டிஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதன்பின்னர் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முயற்பட்ட போது இந்த சந்தர்ப்பத்தில் அதனை சமர்பிக்க வேண்டாம் என பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணியான அனில் சில்வா ஆட்சேபனை வெளியிட்டார்.

எனினும் அந்த ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + thirteen =

*