;
Athirady Tamil News

யாழில் விநியோகிக்கப்படவுள்ள நாணயக்குற்றிகள்!!

0

யாழ் வணிகர் கழகத்தின் தொடர்ச்சியான வேண்டுகோள்களுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் வடமாகாண அலுவலகம் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் ரூபா 46.5 மில்லியன் பெறுமதியுடைய 8.2 மில்லியன் எண்ணிக்கையான ரூபா 10, ரூபா 5, ரூபா 1 குற்றி நாணயங்கள் வடமாகாணத்தில் வங்கிகளுக்கூடாக இலங்கை மத்திய வங்கியின் வடமாகாண பிராந்திய அலுவலகத்தினால் பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இனிவரும் காலங்களில் குற்றி நாணயங்களின் புழக்கம் தொடர்பான தங்களது தேவைப்பாடுகளை நிறைவேற்ற இலங்கை மத்திய வங்கியின் வடமாகாண பிராந்திய
அலுவலகம் ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. ஆகவே வர்த்தகர்கள்
மற்றும் பொது மக்கள் தங்களுக்குத் தேவையான மேலதிக குற்றி நாணயங்களை பெற விரும்பின் மத்திய வங்கியின் வடமாகாண பிராந்திய அலுவலகம் ஊடாக பெறுவதற்கு யாழ் வணிகர் கழகம் ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளும் என அறியத்தருகின்றோம்.

ஆகவே தேவையானவர்கள் விரைந்து இல-165, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள யாழ் வணிகர் கழகத்தில் விண்ணப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் இவற்றை தங்களது தேவையின் பொருட்டு உரிய விதத்தில் பயன்படுத்துவதோடு, குற்றி நாணயங்களை ஓரிடத்தில் தேங்காது பயன்படுத்துமாறும் யாழ் வணிகர் கழகம் கேட்டுக்கொள்கின்றது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − eleven =

*