;
Athirady Tamil News

ஏழாலையில் கசிப்பு உற்பத்தி முறியடிப்பு – இருவர் கைது!! (படங்கள்)

0

ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் இந்த கசிப்பு உற்பத்தி இன்று வெள்ளிக்கிழமை முறியடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு 70 லீற்றர் கசிப்பு, சுமார் ஆயிரம் லீற்றர் கோடா, வெற்றுத் தகரங்கள், கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நாளை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவே இந்த கசிப்பு உற்பத்தியை முறியடித்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*