;
Athirady Tamil News

தங்­கத்­துக்கு நிக­ரான விலையில் மரக்­கறி: எதிர்க்­கட்சி கடு­மை­யாக சாடல்!!

0

மரக்­க­றி­களின் விலை தற்­போ­தைய ஆட்­சியில் தங்­கத்தின் விலைக்கு நிக­ராக மாறி­யுள்­ளது. ஆகவே மக்கள் திருடி உண்ணும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்ள எதிர்க்­கட்சி வாக்­க­ளித்த மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை இழந்­தது ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர் எனவும் குறிப்­பிட்­டுள்­ளது.

எதிர்க்­கட்­சித்­த­லைவர் காரி­யா­ல­யத்தில் வியா­ழக்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது இவ்­வாறு தெரி­வித்த ஐக்­கிய தேசிய கட்­சியின் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜே.சீ. அல­வத்­து­வல மேலும் கூறி­ய­தா­வது ,

அர­சாங்கம் தற்­போது மந்த நிலையில் உள்­ளது. அரச ஊழி­யர்­களின் சம்­பளம் மற்றும் ஓய்­வூ­தி­யத்தை குறைக்கும் நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்கம் சுற்­ற­றிக்­கையின் ஊடாக மேற்­கொண்­டுள்­ளது. பொருட்­களின் விலை நினைத்து பார்க்க முடி­யாத அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது. இவை அனைத்தும் இரண்டு மாத காலப்­ப­கு­திக்குள் இடம் பெற்­றுள்­ளன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ திடீர் விஜ­யங்­களை மேற்­கொள்­கின்றார். அவ்­வா­றி­ருந்தும் கூட மக்­களின் பிரச்­சி­னை­களை அவரால் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. அத்­துடன், அரச திணைக்­க­ளங்­களின் உயர் அதி­கா­ரி­க­ளாக வியத்­மக அமைப்­பினை சேர்ந்­தோரும் , உற­வி­னர்­களும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். கடந்த 2015 ஆம் ஆண்­டிற்கு முன்னர் இடம் பெற்ற விட­யங்­களே மீண்டும் ஆரம்­ப­மா­கி­யுள்­ளன.

நடுத்­தர வர்க்­கத்­தினர் மற்றும் இளை­ஞர்கள் இதற்­கா­கவா அவர்­களை நம்பி வாக்­க­ளித்­தனர். முப்­ப­டை­யி­னரின் சம்­ப­ளத்தை , 1000 , 5000 ரூபா­வினால் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

மக்கள் இந்த அர­சாங்­கத்­திடம் எதிர்­பார்த்த விட­யங்கள் அவர்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. அவர்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர். மரக்­கறி , உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலைகள் தங்­கத்தின் விலைக்கு நிக­ராக உயர்ந்­துள்­ளது. மக்கள் உண­விற்­காக பொருட்­களை திருடும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் , வெறு­மனே குரல் பதி­வு­களை காட்டி மக்­களை ஏமாற்­றாது, எமது ஆட்­சியில் இருந்த நிலை­மையை ஏனும் மீண்டும் ஏற்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

எமது ஆட்­சியில் மக்­க­ளுக்கு நன்­மை­ப­யக்கும் வகை­யி­லான பல்­வேறு திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அந்த வகையில் மாண­வர்­களின் மஹா­பொல உதவி தொகையின் பெறுமதியை 2500 ரூபாவிலிருந்து 5000 ரூபாவாக அதிகரித்தோம்.

இவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமெதனையும் அரசாங்கம் கொண்டுவருமாயின் அதற்கான அனைத்து ஒத்துழைப்பினையும் எதிர்க்கட்சி என்ற வகையில் வழங்க தயாராகவுள்ளோம் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + 19 =

*