;
Athirady Tamil News

வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும்!! (படங்கள்)

0

ஆதனவரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிற்கு ஆதரவாக அங்கஜன் தலைமையிலான அணி செயற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளரு்ம, கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளருமான சதாசிவம் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரை சந்தித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த வர்த்தகரை சந்தித்து தமது ஆதரவினை தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதேச சபையில் அதிகளவான நிதி நிரந்தர வைப்பில் உள்ளது. அதனை தமது வாகன எரிபொருளிற்காகவும், வேறு தேவைகளிற்காகவுமே பிரதேச சபையினர் பயன்படுத்துகின்றனர். அதனை எடுத்த மக்களின் தேவைகளிற்கு பயன்படுத்தலாம். அதை விடுத்து மக்களிற்கு சுமையை கொடுக்கும் வகையில் இவ்வாறு அதிகளவான ஆதன வரியினை பெறுவதற்கு எதிராக நாம் போராடுவதற்கு முழுமையான ஒத்துழை்பினை வழங்குவோம். எமது கட்சி சார்ந்த பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச சபையின் இவ்வாறான செயற்பாடுகளிற்கு எதிராக செயற்படுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகரிற்கு ஆதரவாக செயற்படுவார்க்ள. அவர்கள் மாத்திரமல்ல, அங்கஜன் இராமநாதனை தலைமையாக கொண்ட அனைவரும் குறித்த போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குவார்கள் என தெரிவித்தார்.

புாராட்டத்தில் உள்ள வர்த்தகர் தமது போராட்டத்தை கைவிட்டு, இணைந்து போராட வேண்டும். எமக்கு உயிர் முக்கியம். பல உயிர்களை கொன்றவர்களு இந்த பிரதேச சபையில் உள்ளனர். அவர்களிற்கு உயிரின் பெறுமதி தெரியாது. இந்த நிலையில் உண்ணாவிரத புாராட்டத்தை கைவிட்டு, அனைவரும் இணைந்த மக்களிற்கு நியாயமான போராட்டத்தை முன்னெடுப்புாம். நாம் மக்களிற்கான நியாயமான போராட்டங்களை முன்னெடுப்புாம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

போராட்டத்தை கைவிடப் போவதில்லை தவிசாளருக்கு வர்த்தகர் தெரிவிப்பு!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 6 =

*