;
Athirady Tamil News

இலங்கை மாணவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்து வருமாறு அறிவுறுத்தல்!!

0

சீனாவின் உஹானில் உள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் திரும்ப நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியுறவு செயலாளர் மற்றும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
காடுகளில் வவ்வால்களை சாப்பிடும் பாம்புகளில் இருந்து புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகி இருப்பது ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல், இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த 1072 பேரையும் காப்பாற்ற சீன டாக்டர்கள் குழு போராடி வருகிறது. எந்த தடுப்பு மருந்துக்கும் கட்டுப்படாமல் கொரோனா வைரஸ் தீவிரமாக செயல்படுவதால் டாக்டர்கள் திகைத்துள்ளனர்.

கொரோனா வகை வைரஸ்கள் வரிசையில் இதுவரை 6 வகை வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த 6 வகை வைரஸ் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன.

ஆனால் தற்போது சீனாவில் பரவி இருப்பது கொரோனாவின் 7-வது வகை புதிய வைரசாகும். இந்த 7-வது வைரஸ் சற்று அதிக ஆக்ரோ‌ஷத்துடன் உள்ளது. இதனால் இதை எதிர்கொள்ள முடியாமல் ‌வுகான் நகர மக்கள் தவித்தபடி உள்ளனர்.

இந்த 7-வது வகை வைரஸ் எந்த விலங்கிடம் இருந்து எப்படி, எந்த வகையில் உருவானது என்பதை தெரிந்து கொண்டால்தான் அதற்கு ஏற்ப தடுப்பு மருந்துகளை நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியும். அதற்கான முயற்சிகளில் சீன மருத்துவர்கள் குழு ஈடுபட்டுள்ளது.

வுகான் நகரில் உள்ள இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது உறுதிபடுத்தப்பட்டதால் அந்த சந்தையில் இருந்த இறைச்சிகள், உயிருடன் இருந்த ஆடு, மாடு, பன்றி, கோழி, பாம்பு, நரி, எலி, பூனை, நாய் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + five =

*