;
Athirady Tamil News

தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் – வவுனியா அபிவிருத்திக் குழுத் தலைவர்!!

0

தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்

தேர்தல் முடிந்த பின்பு வீட்டுத்திட்டம் மற்றும் வேலைவாய்பு என்பன முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான தர்மபால செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ வீட்டுத் திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அவர்கள் வீட்டுத் திட்டம் தொடர்பில் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதேபோல் வேலைவாய்ப்புக்கும் தற்போதைய அமைச்சரவை அங்கீகாரம் இல்லை. அங்கீகாரம் கிடைத்தால் வீட்டுத்திட்டம், வேலைவாய்ப்பு இரண்டையும் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுவோம். கிடைக்காவிட்டால் இன்னும் ஒன்றரை மாதத்தில் தேர்தல் வரும். அது முடிந்த கையுடன் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போதைய ஜனாதிபதி கவனமாகத் தான் அரசாங்கத்தை நடத்துகிறார். அவரிடம் எந்த பேத வேறுபாடுகளும் இல்லை. மூவின மக்களுக்கும் அரசாங்கம் மூலமாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் சும்மா திரிகிறார்கள் என்பதற்காக 10 ஆம் ஆண்டிற்கு கீழ் படித்தவர்களுக்கு ஜனாதிபதி இந்த வேலைவாய்பை வழங்கியுள்ளார்.

அடுத்த தேர்தலில் மூவின மக்களும் ஒன்றாக நிற்க வேண்டும். ஒன்றாக நிற்கக் கூடிய வசதியை நாங்கள் ஏற்படுத்தி கொடுப்போம். கோட்டபாய ராஜபக்ச வந்ததால்தால் வெள்ளை வான் வரும் என போன அரசாங்கம் சொன்னது. ஆனால் கோட்டபாய ஜனாதிபதியாகி 65 நாட்கள் கடந்தும் இன்னும் வெள்ளை வானும் வரவிவ்வை. கறுப்பு வானும் வரவில்லை. மக்கள் தற்போது ஜனாதிபதி தெர்டர்பில் நல்லது தான் சொல்கிறார்கள். எமது அலுவலகத்தை தேடி பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள். அவர்களுக்கும் தPர்வு பெற்றுக் கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*