;
Athirady Tamil News

புங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது… (படங்கள்)

0

புங்குடுதீவில் கள்ளமாட்டு இறைச்சியுடன், மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் கைது… (படங்கள்)

வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் மற்றும் புங்குடுதீவு J / 26 பிரிவு கிராமசேவகர் சிறீதரன் ஆகியோரின் முயற்சியால் நீண்டகாலமாக புங்குடுதீவிலுள்ள கால்நடை பசுக்களை இறைச்சிக்காக கடத்தும் மண்டைதீவினை சேர்ந்த தமிழ்மாறன் எனும் நபர் நேற்று பின்னேரம் ஒரு முழு மாட்டின் இறைச்சியுடன் கைய்யும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு ஊர்காவற்துறை பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மடத்துவெளி – வல்லன் பகுதிகளுக்கிடைப்பட்ட பற்றைக்காட்டு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த நபர் விவாகரத்து செய்யாமலேயே இதுவரை ஐந்து திருமணங்களை புரிந்துள்ளதாகவும், இறுதியாக புங்குடுதீவு மடத்துவெளி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாகவும் ஊர்காவற்துறை பொலிசார் தெரிவிக்கின்றனர்,

தகவல் & படங்கள்.. திரு.குணாளன் -புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*