;
Athirady Tamil News

கொரோனா தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் இருவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு!!

0

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பயணிகள் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்களை ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பியுள்ளதாக விமான நிலைய சுகாதார பிரிவின் வைத்தியர் சந்திக்க பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் இருந்து வருகை தந்துள்ளனர்.

இவர்களில் 47 வயதான இந்திய பெண் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த பயணி விமான சேவை ஊழியர் ஒருவரை அழைத்து தான் கடுமையான குளிரை உணர்வதாகவும் அதேபோல் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விமானத்தின் பிரதான விமானிக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டு குறித்த பெண் வைத்திய பரிசேதனைக்கு உட்படுத்தபட்ட நிலையில் அவரின் உடலில் 101 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டுள்ளது.

இதற்கமைய அவர் உடனடியாக ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க விமான நிலைத்தில் இருந்து வலைகுடா நாடு ஒன்றுக்கு பயணித்துள்ளார்.

அதன் பின்னர் அதே விமானத்தில் பயணித்த 37 வயதான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணும் விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள விசேட கருவிகளின் ஊடாக இனம் காணப்பட்டுள்ளார்.

அவரின் உடலில் 102 பாகை பெரநைட் வெப்பநிலை உணரப்பட்டதை அடுத்து அவரும் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

அவரும் பாகிஸ்தானை நோக்கி பயணித்த பயணி என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*