;
Athirady Tamil News

திடீரென நீல நிறத்தில் மாறிய கால்கள்: மருத்துவர்கள் கூறிய காரணத்தால் வெட்கப்பட்ட அமெரிக்கர்..!!

0

அமெரிக்கர் ஒருவர் திடீரென தனது கால்கள் நீல நிறத்தில் மாறியதால் பதறியடித்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

Mark Shrayber என்பவர் தனது கால்கள் திடீரென நீல நிறத்தில் மாறியிருந்ததால் பயந்துபோய் மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சென்ற Markஐ பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கால்கள் நீல நிறமாக மாறியதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளனர்.

அதைக் கேட்ட Markக்கு வெட்கத்தில் செத்துவிடலாம் என்று தோன்றியதாம். அப்படி என்ன காரணத்தைக் கூறினார்கள் மருத்துவர்கள்? புதிதாக உடை வாங்கியதும், அதை துவைக்காமல் போடுபவர்களுக்கு வரும் வியாதிதான் உங்களுக்கு வந்துள்ளது என்றார்களாம் மருத்துவர்கள்.

முதலில் புரியாமல் விழித்த Markக்கு, பின்னர்தான் புரியவந்திருக்கிறது, தான் புதிதாக வாங்கிய கால்சட்டையை துவைக்காமல் போட்டதால், அதிலுள்ள நீல நிறம்தான் தன் கால்களில் ஒட்டியிருக்கிறது என்பது.

வெட்கத்துடன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பினாராம் அவர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + two =

*