;
Athirady Tamil News

அட்டனில் வாடிவீடு, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசம்!! படங்கள்)

0

அட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடு, திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியே 28.01.2020 அன்று அதிகாலை 4.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதி அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது.

அட்டன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − six =

*