;
Athirady Tamil News

மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு உத்தரவு !!

0

அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளால் பல் வேறு அசௌகரியர்களை எதிர்நோக்கியுள்ளதாக அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவால் முறைப்பாடு குறித்த விசாரணைக்கு முன்னர் அவர்களுக்கு எதிராக மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெறுவதால் முறைப்பாட்டாளர்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது குறித்து ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி முறைப்பாட்டாளர்களின் அரசியல் அழுத்தங்கள் மீதான வழக்கு விசாரணை சம்பந்தமாக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் முன்னிலையாவதா? இல்லையா? என தீர்மானிக்கும் வரை வழக்கு விசாரணையை நடத்துவது மற்றும் அதனுடன் தொடர்புடைய சாட்சிகளை விசாரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபருக்கு அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + seven =

*