;
Athirady Tamil News

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்பு.!!

0

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று செவ்வாய்க்கிழமை காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 19 =

*