;
Athirady Tamil News

புதூர் சந்தியில் விசேட சோதனை; மூவர் கைது!! (படங்கள்)

0

வவுனியா, கனகராயன்குளம் புதூர் சந்தியில் இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கடற்படை சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு புளியங்குளம் பொலிசாரிடம்
ஓப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற
இ.போ.சபை பேருந்தை புதூர் சோதனை சாவடியில் வழிமறித்து இராணுவத்தினரும், பொலிசாரும் சோதனை செய்த போது 5 கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடற்படை சிப்பாய் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இ.போ.சபை பேருந்தை குறித்த சோதனை சாவடியில் சோதனை செய்த போது 2கிலோ கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓருவர் கைது செய்யப்பட்டார்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவும், கைதான மூவரும் புளியங்குளம் பொலிசில் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twenty =

*