;
Athirady Tamil News

கைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு!! (படங்கள்)

0

கைதடி குருசாமி வித்தியாலய இல்லமெய்வல்லுனர் திறனாய்வு – வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்

கைதடிகுருசாமி வித்தியாலயத்தின் 2020ஆம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் ந.ஜெயரூபன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக தென்மராட்சிக்கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆலோசகர் சி.சிவதாசனும் கலந்துகொண்டதுடன் பழையமாணவர்களான திருமதி ஜனனி மற்றும் ராகவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மைதான நிகழ்ச்சிகள், சுவட்டு நிகழ்ச்சிகள், இடைவேளையின் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் விருந்தினர்களின் உரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும், பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விருந்தினர்களுடன், அதிபர், ஆசிரியர்கள் , மாணவர்கள், ஊரவர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*