;
Athirady Tamil News

முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்? (வீடியோ)

0

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வட.கொழும்பு போதனா வைத்தியசாலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம், குருநாகல், கரகம்பிட்டிய, கண்டி, நுவரெலியா, அநுராதபுரம், இரத்தினபுரி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் பரிசோதனை செய்துக்கொள்ள முடியும்.

அத்துடன் குறித்த பகுதிகளிலுள்ள போதனா வைத்தியசாலையில் அதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் நேற்று முன்தினம், முல்லைத்தீவில் இருந்து ஒருவரும் கண்டியில் இருந்து ஒருவரும் வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை சீனாவில் இருந்து வருகைத்தரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவில் இரண்டு வாரம் தடுத்து வைத்து அவதானிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”








கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள் மேலும் 11 வைத்தியசாலைகளில் !!

இலங்கையர்கள் குழுவிற்கு கொரோனா வைரஸ் இல்லை!!

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு நாமல் முக்கிய அறிவிப்பு!!

கொழும்பு மற்றும் புறநகரில் முகக் கவசங்களுக்குத் தட்டுப்பாடு!!

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் தியதலாவ இராணுவ முகாமிற்கு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + three =

*