;
Athirady Tamil News

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்!!

0

பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

“கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்த விடயங்கள் வெளியாகின.

இதன் காரணமாக இவர்களை அங்கொடையில் உள்ள தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நடகவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, கம்பஹா, கண்டி, களுபோவில, கராப்பிட்டிய, அநுராதபுரம், குருநாகல், இரத்தினபுரி, பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய வைத்தியசாலைகளிலும் இந்த நோய் தொடர்பில் முன்கூட்டிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்? (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*