;
Athirady Tamil News

அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் – சஜித்!!

0

கொரோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாகக் கருதி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸால் இலங்கையில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் உலக சுகாதார ஸ்தாபனம், அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மத்திய நிலையத்துடன் இணைந்து இதற்கான தீர்வைக் காண இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டதன் பின்னர் இங்கும் அவதான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இந்த வைரஸ் தாக்கம் தொடர்பாக கலந்துரையாட நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

முல்லைத்தீவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ்? (வீடியோ)

கொரோனா வைரஸ்; யாழ்.போதனா உள்ளிட்ட 12 வைத்தியசாலைகள் தயார் நிலையில்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*