;
Athirady Tamil News

யாழ். புன்னாலைக்கட்டுவனில் விபத்து: இருவர் படுகாயம்!! (படங்கள்)

0

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்திக்கு அருகில் பலாலி வீதியில் முச்சக்கர வண்டியும் மோட்டார்ச் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(27) மாலை இடம்பெற்றது.

படுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து கடுமையாகச் சேதமடைந்ததுடன் மோட்டார்ச் சைக்கிளும் கடும் சேதங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 3 =

*