;
Athirady Tamil News

வடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் – ஜன. 29, 1863..!!!

0

வடஅமெரிக்காவில் வாழும் பழங்குடிகளான சோஷோன் இனத்தவர்கள் அமெரிக்காவில் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு என்று மூன்று பிரிவுகளாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுடைய மொத்த எண்ணிக்கை 1845-ல் 4500 ஆக இருந்தது. அதன்பிறகு 1863-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் இடாகோ மாநிலத்தில் பெயார் ஆற்றுக்கு அருகில் இராணுவத்துடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைக்கு ‘பெயார் ஆற்றுப் படுகொலைகள்’ என பெயரிடப்பட்டது.

மேலும் இதே தேதியில் நடந்த பிற நிகழ்வுகள்:

• 1676 – மூன்றாம் பியோதர் ரஷ்யாவின் மன்னனாக முடி சூடினான்.

• 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ் சிங்கப்பூரில் தரையிறங்கினார்.

• 1861 – கான்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது.

• 1916 – முதலாம் உலகப் போர்: பாரிஸ் ஜெர்மனியரின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது.

• 1940 – ஜப்பான், ஒசாக்காவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று வெடித்ததில் 181 பேர் கொல்லப்பட்டனர்.

• 1946 – ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.

• 1996 – இத்தாலியில் வெனிஸ் நகரில் உள்ள ஓப்பரா மாளிகையான லா ஃபெனீஸ் தீயினால் அழிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 1 =

*