;
Athirady Tamil News

பசுமையான கிழக்கு நாவிதன்வெளி மர நடுகை வேலைத்திட்டம்!! (படங்கள்)

0

“பசுமையான கிழக்கு“ மாகாண மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான மர நடுகை வேலைத்திட்டம், நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள வேப்பையடி ஆரம்பபிரிவு வைத்தியசாலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாவிதன்வெளி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.ஜெயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் வேப்பையடி ஆரம்பபிரிவு வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி சித்தி ஜாயிஷா அனீஸ் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.லோகிதராஜ் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் அரச அலுவலுகங்கள் மாத்திரமன்றி, கிராமங்கள் ரீதியாகவும் கிராம அபிவிருத்தி சங்கங்கள், மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் ஏற்பாட்டில், மரக்கன்றுகள் விநியோகம் நடைபெற்றதுடன், மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 16 =

*